பதவி ஆசைகளுக்காக பாதயாத்திரை - இம்ரான் மஹ்ரூப்

எப்.முபாரக்-
லங்கையில் ஆரம்ப காலங்களில் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்வது தமக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்று ஆனால் இன்று அரசியல் பதவி ஆசைகளை மையமாக வைத்து பாத யாத்திரை மேற்கொள்கின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். தோப்பூர் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை (30) நடைபெற்றபோது கட்சி ஆதவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பாதயாத்திரைகளை எந்த மாவட்டத்தில் வைத்தாலும் கட்சியை ஆட்டம் காணச் செய்யமுடியாது.திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்புகளும் மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது.மகிந்தவின் எதிரணி பொது மக்களை தவறான வழியில் தான் வழிநடாத்திச் செல்ல முயற்சிக்கின்றது.

தற்போது திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றார்கள் காரணம் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது இது நிவர்த்திக்கப்பட வேண்டும் கூடிய விரைவில் இதற்கான சட்ட வரைவு அமைக்கப்பட்டு கட்சி முக்கியஸ்தர்களினால் முடிவு எட்டப்படும் . எனது தந்தை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த போது அதிகமான சேவைகளையும், அபிவிருத்திகளையும் மேற்கொண்டுள்ளார் அக்காலத்தில் அதிகமான வேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார். தந்தை செய்த சேவைகளை விடவும் நாம் அதிகமாக மேற்கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசமாகும் இதில் இனம், மதம், சாதி, பாகுபாடுகள் இன்றி செயலாற்ற வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -