மகிந்தவின் நிழல் அமைச்சரவை கூட்டம் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே– இம்ரான் MP

நிழல் அமைச்சரவை கூட்டம் நடத்த சிறந்த இடம் வெலிக்கடை சிறைச்சாலையே என தெரிவித்தார் திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாம் கடந்த தேர்தல்களில் மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்ற முடியவில்லை நாம் திருடர்கள் என கூறிய பலர் இன்று அமைச்சரவையில் உள்ளனர் இவர்களை அமைச்சரவையில் வைத்துகொண்டு எவ்வாறு நாம் திருடர்களை கைதுசெய்வது இவர்களினால் ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மக்கள் வைத்த நம்பிக்கை குறைகிறது நாம் நினைத்தால் இன்றே தனித்து ஆட்சியமைக்க முடியும் ஆனால் ஜனாதிபதியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு மதிப்பளித்து இன்றுவரை பொறுமை காக்கிறோம் தேசிய அரசாங்கத்தின் மூலம் நாம் பெற்றுகொண்டதைவிட இழந்ததே அதிகம் ஆகவே நாடா கட்சியா என ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டும்.

எதிர்கட்சியில் உள்ளவர்களுக்கு அமைச்சு பதவிகள் இல்லாமல் நிம்மதியாக உறங்கமுடியாதுள்ளது அதனால்தான் இன்று நிழல் அமைச்சரவை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள் இந்த அமைச்சரவை கூட்டம் நடத்த சிறந்த இடம் வெலிக்கடை சிறைச்சாலையே இவ்வமைச்சரவையில் வழங்கப்பட்ட அமைச்சுப்பதவிகள் அனைத்தும் நகைப்புக்குரியது வெளிவிவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவாம் நீங்களே யோசித்துபாருங்கள் நாமல் வெளிவிவகார அமைச்சராக இருந்தால் எமது நாட்டின் நிலைமை என்னவாகும் இங்கு ரக்பி விளையாடும்போது போது ஏற்படும் கருத்துமுரண்பாடுகளை விட ஐக்கிய நாடுகள் சபையில் பல மடங்கு ஏற்படும் ரக்பி போட்டிகளில் ஏற்பட்ட கருத்துமுரண்பாடுகளால் பெற்றுக்கொண்ட அனுபவத்தை அங்கும் பிரயோகித்தால்
இந்த நிழல் அமைச்சரவையை நிஜ அமைச்சரவையாக கற்பனை செய்து பார்க்கும் எவரும் இனி கூட்டு எதிர்கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -