அரசை கவிழ்க்க தெரிந்தால் ஏன் தனது மகன்மார் கைதுசெய்யப்ப்படும்வரை காத்திருக்க வேண்டும் - இம்ரான் MP

ரசை கவிழ்க்க தெரிந்தால் ஏன் தனது மகன்மார் கைதுசெய்யப்ப்படும்வரை காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் அரசை கவிழ்ப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பாக புதன்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

இவ்வரசை கவிழ்ப்பதாக கூறிக்கொண்டு கூட்டுஎதிர்கட்சியினர் மக்கள் முன் தவறான கருத்துகளை அவர்கள் சார்பான ஊடகங்களை பயன்படுத்தி பரப்பி வருகின்றனர் அவர்கள் எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் அமைச்சர்களாக இருக்கும்போது செய்தவை இப்போது அவர்களாகவே அதை வெளிக்கொண்டு வருகின்றனர் அமைச்சர் ஒருவருக்கு ஒரு வாகனம் கொள்வனவு செய்தது வீன்செலவாக தெரிந்த விமல் வீரவம்சவுக்கு தனது அமைச்சுக்கு 30 க்கு மேற்பட்ட வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மாதாந்தம் கோடிக்கணக்கில் வாடைகை செலுத்தியது அத்தியாவசியம்.

அரசை கவிழ்ப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்கள் முன்னிலையில் கூறுகிறார் அவ்வாறு அவருக்கு அரசை கவிழ்க்க தெரிந்திருந்தால் ஏன் தனது மகன்மார் கைதுசெய்யப்ப்படும்வரை காத்திருக்க வேண்டும் நேற்றோ நேற்று முன்தினமோ அரசை கலைத்து நாமல் ராஜபக்ச சிறைக்கு செல்வதை தடுத்திருக்கலாம் தனிக்கட்சி ஆரம்பிக்கபோகிறேன் என்று தோல்வியடைந்ததில் இருந்து கூறித்திரிகிறார் இன்றுவரை ஒன்றையும் காணவில்லை அதேபோன்றுதான் இவரால் தனிக்கட்சியும் ஆரம்பிக்க முடியாது அரசையும் கவிழ்க்க முடியாது.

கண்டியில் இருந்து கொழும்பு வரையல்ல இவர்கள் காங்கேசன்துறையிலிருந்து தேவேந்திர முனை வரை பாதயாத்திரை சென்றால் கூட இவர்களால் எதிவரும் நாட்களில் இடம்பெறவுள்ள கைதுகளையோ நல்லாட்சி அரசை ஒன்றும்செய்ய முடியாது என தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -