புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலையில் முதல் தடவையாக SLMC யின் தொழிற் சங்கம்- அன்வர்

அஹமட் இர்ஷாட், எப். முபாறக்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தொழிற் சங்கம் முதல் தடவையாக புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலையில் நிறுவப்பட்டுள்ளது.

தற்பொழுது கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கீழ் புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலை செயற்பட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைவரும் நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தலைமையின் கீழ் உள்ள ஜாதிக சமகி சேவக உர்திய சங்கமய 01.07.2016 ம் திகதி முதல் தொழிற் சங்கமாக முதல் தடவையாக பதிவு செய்யபடுள்ளது.

குறித்த அமைப்பினூடாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன் அவர்களின் உரிமைகளை பெற்றுகொடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தொழிற் சங்கத்தினூடாக தாம் முன்னெடுப்பதாக அதன் தலைவர் அ.மு.பாயிஸ் தெரிவித்தார்.

ஏற்கனவே குறித்த தொழிற்சாலையில் பெரிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ,மக்கள் விடுதலை முன்னணி ,போன்ற கட்சிகளின் தொழிற் சங்கங்கள் இயங்கி வருகின்றன எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -