ஷவ்வால் (ஹிஜ்ரி 1437) மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு நாளை செவ்வாய் கிழமை (05.07.2016) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.
011 2677974, 0774781477, 0774781474, 0777728725 #Fax : 011 2677975