பங்களாதேஷில் மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் வட பகுதியில் பெருநாள் தொழுகை நடைபெற்ற இடத்துக்கு அருகே சிறிய குண்டு ஒன்று வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த தொழுகைக்காக சுமார் 200,000 பேரளவில் பாடசாலை மைதானத்தில் ஒன்றுகூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பாதுகாப்பு படையினருக்கும், ஆயுத தாரிகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும், துப்பாக்கி சூட்டு சப்தங்கள் கேட்பதாகவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)