15 ஆயிரம் கோடி ரூபா நிதி மோசடி செய்த மஹிந்த...!

மிகப் பெரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு கடந்த ஒரு வருடகாலமாக நடத்திய விசாரணைகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபா நிதி மோசடி குறித்த தகவல்களை கண்டறிந்துள்ளனர். நிதி மூலம் இந்தளவு மோசடிகள் நடந்துள்ளது. அரச வளங்களான வாகனங்கள், காணிகள், கட்டிடங்கள் உட்பட அரச வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை கணக்கிடுவது சிரமமாகியுள்ளது.

எனினும் அரச வளங்கள் மூலம் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இந்த மோசடிகள் நடந்துள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபஸக்வின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அந்த குடும்பத்துடன் தொடர்புடைய உறவினர்கள் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை, அரச வளங்களை மோசடி செய்தமை, அரச வளங்களை பயன்படுத்தி அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை இல்லாமல் செய்தமை, அரச பணத்தை கொண்டு தனிப்பட்ட செலவுகளுக்கு செலுத்தியமை, இலவசமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டமை, தேர்தலுக்காக அரச பணத்தை செலவிட்டமை, அரச ஊழியர்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தியமை உள்ளிட்ட மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபா பணத்தை கையாடல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகள், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகங்களில் பணியாற்றிய அதிகாரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், அரச கூட்டுத்தாபனம்,அதிகார சபைகள், சபைகள் போன்றவற்றின் தலைவர்கள், உயர் அதிகாரிகள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்களின் பிரதானிகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழல்கள், நிதி மோசடிகள் குறித்து 350 முறைப்பாடுகள் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.

அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் 5 கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்யப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் என தெரியவருகிறது. அரச நிறுவனங்களால் திறைசேரிக்கு வழங்க வேண்டிய நிதி வருமானங்களை பல நிறுவனங்கள் அவற்றை திறைசேரிக்கு வழங்காது நிறுவனங்களின் பிரதானிகளது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

அரச கணக்காய்வு திணைக்களமும் இது குறித்து கடந்த காலத்தில் விசாரணைகளை நடத்தியுள்ளது. இதனிடையே நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி, அவற்றை கண்டறிய நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பல நிறுவனங்களில் ஆவணங்களில் பதியப்படவில்லை. மேலும் பல ஆவணங்கள் காணாமல் போயுள்ளன.

இதனை தவிர அரச நிறவனங்களில் துறைக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகள் கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமான தகவல்களை வழங்குவதை தவிர்த்து வரும் நிலைமை காணப்படுகிறது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்தில் பெரும் தொகையான அரச நிதி விரயம் செய்யப்பட்டமை சம்பந்தமாக, எப்போதும் கண்டுபிடிக்க முடியாத மிகப் பெரிய நிதி கோடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமான தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

விசாரணைகளை முடித்து சட்டமா அதிபருக்கு அனுப்பி, அவரது ஆலோசனைகளின் படி 100 முறைப்பாடுகள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. மேலும் பல விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்வின்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -