ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் சாய்ந்தமருது பிரதேசபாடசாலைகளின் அபிவிருத்திற்கு 16 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழே இந்நிதி ஒதுக்கீடுகள்மேற்கொள்ளப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் அபிவிருத்திவேலைகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று (12) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குஇடம்பெறவுள்ளது.
அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட கல்விமான்கள்,பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மழ்ஹருஸ் ஷம்;ஸ் மகாவித்தியாலயம், ஜீ.எம்.எம்.எஸ், எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம், அல்-கமறூன் வித்தியாலயம், ஸாஹிறா தேசியபாடசாலை, றியாழுல் ஜன்னா வித்தியாலயம், லீடர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் வித்தியாலயம், அல்-ஜலால் வித்தியாலயம்ஆகிய பாடசாலைகள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பாடசாலை ஒன்றின் அபிவிருத்திற்கு தலா 2 கோடி ரூபா நிதி வழங்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது. சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திற்கு நிதிகளை ஒதுக்கீடு செய்து தந்த பிரதி அமைசசர்ஹரீஸூக்கு கல்விமான்கள், புத்திஜீவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர்தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.