நல்லாட்சி அரசாங்கத்தினால் 400 இடங்களில் WIFI வசதி..!

ல்லாட்சி அரசாங்கத்தினால், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 400 இடங்களில் Wifi வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 நிறுவனங்களிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய தொழிநுட்பத்தினூடாக பெற்றுக் கொடுக்கப்படும் Wifi வசதி இருமடங்கு வேகம் கொண்டதாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய சேதியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், நாடு தழுவிய ரீதியில் பல இடங்களில் இலவச Wifi வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -