பாகிஸ்தானில் இன்று குண்டுவெடிப்பு 42 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்றகுண்டுவெடிப்பில் 42 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. குறித்த குண்டு வெடிப்பினால் பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள்தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான பாகிஸ்தானின் பிரபல வழக்கறிஞர்ஒருவரின் சடலமானது குறித்த வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயேகுறித்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதற்கமைய இந்த வைத்தியசாலைக்கு முன்பாக சட்டத்தரணிகள் மற்றும் பெருமளவானஊடகவியலாளர்கள் குழுமியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த குண்டுவெடிப்பினால் அதிகளவான ஊடகவியலாளர்கள் பலியாகியிருக்கலாம்என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்றுதகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -