மீராவோடை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்காக ரூபா 48 இலட்சம் ஒதிக்கீடு.!

M.T. ஹைதர் அலி-
ட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியின், மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு 2016.03.30 மற்றும் 2016.05.31 ஆகிய தினங்களில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் திடீர் விஜயங்களை மேற்கொண்டதோடு, வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை போன்ற விடயங்களை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் எச்.எம்.எம். முஸ்தபா மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் தெளிவாக ஆவணங்களுடன் சுட்டிக்காட்டியதோடு, இவ்வைத்தியசாலையில் தாதி ஒருவரின் தேவைப்பாடும், அம்புலன்ஸ் வண்டி பழுதடைந்த நிலையிலும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்ட மாகாண சபை உறுப்பினர் மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் ஆகியோரை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விபரித்தார். அதனைத்தொடர்ந்து இவ்வைத்தியசாலைக்கு மிக அவசரமாக ஒரு தாதியையும், பழுதடைந்த நிலையில் காணப்படும் அம்புலன்ஸ் வண்டிக்கு பதிலாக புதியதோர் வண்டி ஒன்றினை வழங்குவதற்கும் மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோருடன் தெரியப்படுத்தி இருப்பதாகவும் அதனை துரித கதியில் பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதியளித்ததோடு, 2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினூடாக மாகாண சபை நிதியிலிருந்து இவ்வைத்தியசாலைக்கு ரூபா. 48 இலட்சம் ஒதிக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீராவோடை பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் வெளி நோயாளர் பிரிவுவின் இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் மாடியினை பூரணமாக்குவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களிம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அவர்கள் இந்நிதி ஒதிக்கீடுகளை செய்துள்ளதோடு, இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் எச்.எம்.எம். முஸ்தபா தலைமையில் 2016.08.02ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) பி.ப. 3.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...

நான் இவ்வைத்தியசாலைக்கு இரண்டு தடவைகள் விஜயங்களை மேற்கொண்டு இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த நிலையில் காணப்படும் அம்புலன்ஸ் வண்டி இவ்வைத்தியசாலையில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளும் எங்களுடைய முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளதோடு, அவர்களும் இவ்வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்கின்ற விடயத்தில் கரிசனையும் காட்டி வருகின்றனர்.

இவ்வைத்தியசாலையானது தமிழ், முஸ்லிம் மக்கள் பெரிதும் நண்மையடையும் ஒரு வைத்தியசாலையாகவும் இது காணப்படுவதோடு, ஒரு வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு மிகவும் பங்காற்றுவது வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் அவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவுமாகும். மேலும் இவ்வைத்தியசாலையின் திருத்த வேலைகளுக்காக ரூபா. 14 இலட்சமும், உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா. 8 இலட்சமும் மாகாண சபை நிதியொதிக்கீட்டிலிருந்து நாம் இவ்வைத்தியசாலை அபிவிருத்திக்காக ஒதிக்கியுள்ளோம் என்பதனையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு, கல்வி அபிவிருத்தியை பொருத்தமற்றில் முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களை விட கல்குடா பிரதேசத்திற்கே இவ்வாண்டு கூடுதலான நிதிகளை ஒதிக்கீடு செய்துள்ளோம். அத்தோடு கல்குடா பிரதேசத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதிகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என தனதுரையில் தெரிவித்தார்.

மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியசாலை அபிவிருத்தி குழு மேற்கொண்ட தொடர் முயற்சியினாலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாகவும் துரித கதியில் இவ்வைத்தியசாலைக்கு இந்நிதிகள் மாகாண சபையினூடாக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இன்னும் பல தொடர் முயற்சிகளை மேற்கொண்டு இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக பெரிதும் அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் புதிய அபிவிருத்தி குழு இயங்குகின்றமையும் குறிப்பிடத்ததொரு விடயமாக கருதப்படுகின்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருனாகரன், மாகாண சுகாதார பணிப்பாளர் முருகநத்தன், மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் திருமதி. எல்.எம். நவரட்னராஜா மற்றும் மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் எச்.எம்.எம்.முஸ்தபா, வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.ஸாபி, கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எச்.மீராமுகைதீன், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -