ஷிப்லி பாரூக்கின் 6.2 மில்லியன் ரூபா சொந்த நிதியிலிருந்து புணரமைப்பு செய்யப்பட்ட காத்தான்குடி வீதி (VIDEO)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷட்-

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள சன நெரிசல்மிக்க நகரமான பரீட் நகரில் அமைந்துள்ள பாம் வீதியானது மழை காலங்களில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் மிகவும் சேதமடைந்த நிலையில் மக்கள் போக்குவரத்திற்கு அசெளகரியத்தினை கொடுத்து வந்தது. 

தேர்தல் காலங்களில் அரசியல்வதிகளினால் பல வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டும் தேர்தலுக்கு பிற்பாடு எவரும் கவனிப்பார் அற்ற நிலையிலேயே குறித்த வீதியானது மக்களின் பாவனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை பிரதேசத்திலே மக்கள் மத்தியில் கவலையோடு பேசப்படும் விடயமாகவும் காணப்பட்டது.

பாரிய வீதி அபிவிருத்தி திட்டங்களின் மூலம் குறித்த கிரவல் வீதியினை மட்டமாக்கி தருகின்றோம் என அரசியல் குழுக்களினாலும் அரசியல்வாதிகளினாலும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையிலே அப்போதைய தவிசாளர் அதற்கான அனுமதியினை தரவில்லை என அரசியல் குழுக்களினால் பிரச்சாரம் செய்யப்பட்டு துண்டு பிரசுரங்களும் பரவலாக வெளியிடப்பட்டிருந்தது. அந்த நிலையிலே 2015ம் ஆண்டு நகர சபையானது களைக்கப்பட்டு செயலாளரின் ஆளுமையின் கீழ் நகர சபை இயங்கி வந்தது. ஆனால் தவிசாளர் தங்களுக்கு வீதியினை அபிவிருத்தி செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை என துண்டு பிரசுரங்கள் மூலமும் தீவிர பிரச்சாரத்தின் மூலமும் தங்களது அரசியலினை முடுக்கிவிட்ட அரசியல் குழுவானது செயலாளரின் ஆளுமையின் கீழ் நகரசபை கைமாறப்பட்டதற்கு பிற்பாடு தங்களை ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு மெளனம் சாதித்து வந்தது. 

இந்த நிலையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்கின் நேரடி கவனத்திற்கு குறித்த வீதியின் பிரச்சனை கொண்டு வரப்பட்டதினால் 62 இலட்ச்சம் ரூபாய்களை தனது சொந்த நிதியிலிருந்து செலவு செய்து குறித்த வீதியினை கொங்றீட் வீதியாக புணரமைத்து தருவதாக ஷிப்லி பாரூக்கினால் வாக்குகுறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக உடனடியாக செயற்பட்ட பொறியியலாளர் ஷிப்லி பாரூக் 62 இலட்ச்சம் ரூபாய்களை தனது சொந்த நிதியிலிருந்து ஒதுக்கி குறித்த வீதியினை கொங்றீட் வீதியாக புணரமைபு செய்வதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தார். ஆனால் பொதுவாக வீதிகள் புணரமைப்பு செய்யப்படுகின்ற பொழுது வைக்கப்படுகின்ற எந்த பெயர் பலகையோ அல்லது பொறியியலாளர் ஷிப்லி பாரூகின் பெயரோ பொறிக்கப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும். 

அத்தோடு ஒரு வருடத்திற்குள் கொங்றீட் வீதியாக பூரணமாக்கப்பட்ட குறித்த வீதி திறக்கப்பட்ட பொழுதும் எவருடைய பெயர்களோ அல்லது நிதி ஒதுக்கியவரின் பெயரோ எவ்விடத்திலும் பொறிக்கப்படாமையானது மக்கள் மத்தியில் இருக்கின்ற நன்கொடையாளர்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது என்பது அவ்வீதியில் வசிக்கின்ற மக்களின் கருத்துக்களாக இருக்கின்றது.

பொறியியலாளர் ஷிப்லி பரூக்கின் 62 இலட்ச்சம் ரூபா சொந்த நிதியிலிருந்து கொங்றீட் வீதியாக புணரமைப்பு செய்யப்பட்டுள்ள பாம் வீதியில் வசிக்கின்ற மக்களுடைய கருத்துக்களின் காணொளியானது எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -