திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 91 மில்லியன் ரூபா நிதியில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்..!

அபு அலா, சப்னி அஹமட்-
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியதுறை அமைச்சின் பல மில்லியன் நிதியொதுக்கீட்டின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நேற்று (31) கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீரினால் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 91 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தாதியர் விடுதிகளும், வைத்திய நிபுணர்களுக்கான விடுதிகளும், வீதி நிர்மாணப்பணிக்காகவும், வைத்தியசாலை கட்டிடங்களுக்காகவும், வைத்திய உபகரணங்களுக்காகவும் ஒதுக்கீட்டு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வும், வைத்தியசாலை கட்டிடத்திறப்பு விழாவும் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்ட மூதூர் கிராமோதய சுகாதார நிலையத்திற்கு 6.5 மில்லியனும், தோப்பூர் ஆயுர்வேத மத்திய மருந்தக நிர்மாணப்பனிக்காக 5.5 மில்லியனும், மூதூர் ஆயுர்வேத மத்திய மருந்தக கட்டிடத்திற்காக 5.5 மில்லியனும், மூதூர் ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் விடுதிக்காக 18 மில்லியனும், தாதியர்கள் விடுதிக்காக 35 மில்லியனும், வைத்திய உபகரணங்களுக்காக 10 மில்லியனும்,இறக்கக்கண்டி அல்-ஹம்றா மகா வித்தியாலய மைதானத்தின் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்காக 2 மில்லியனும், புல்மோட்டை பட்டிக்குடா கொங்றீட் வீதி நிர்மாணப் பணிகாக 8.5 மில்லியனும் ஒதிக்கீடு செய்யப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் அன்வரின் வேண்டுகோளுக்கினங்க புல்மோட்டை பிரதேச மக்கள் நலன் கருதில் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சரின் துரித நடவடிக்கையினால் ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் அஹமட் நசீர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தெளபீக், மாகாண சபை உறுப்பினர்களான ஜே. லாஹிர், ஆர்.எம். அன்வர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் செயலாளர் கே. கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே.உசைனுடீன், சுதேச திணைக்கள மாகாண ஆணையாளர் ஆர்.ஸ்ரீதர், சுகாதார திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கே. மருகாணந்தம், நிருவாகம் உதவி மாகாணப் பணிப்பாளர் பிர்னாஸ் இஸ்மாயில், வைத்திய பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -