தாருஸ்ஸலாம் விவகாரம்: அரசாங்கத்தின் திட்டத்தை தடுக்க இடமளிக்காதீர் மேல் மாகாண சபை உறுப்பினர்கள்

ல்லாட்சி அரசாங்கத்தின் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்திலிருந்து கொழும்பு 10 மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேல்மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மாகாண முதலமைச்சரின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சரின் செயலாளர் ஆகியோருக்கு கடிதமொன்றை கையளித்துள்ளனர். 

மேல்மாகாண சபை உறுப்பினர்களான மொஹமட் பாயிஸ், அர்ஷாட் நிசாமுடீன், மொஹமட் அக்ரம், சன் குகவரதன், குருசாமி, ஜயந்த சில்வா ஆகியோரே இக் கடிதத்தில் கையொப்பமிட்டு சமர்பித்துள்ளனர்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நல்லாட்சி அரசாஙத்தின் கல்வி அபிவிருத்தித் திட்டமான அருகிலுள்ள சிறந்த பாடசாலை திட்டத்தில் தாருஸ்ஸலாம் பாடசாலை கடந்த 2015 செப்டம்பர் மாதம் உள்வாங்கப்பட்டது. அதற்கான பொறுப்பை மேல் மாகாண சபை ஏற்றுள்ளது. எவ்வித காரணம் கொண்டும் மேற்படி திட்டத்தை நிறுத்த முடியாது.
மக்களின் பிரதிநிதிகளாகிய தங்களின் வேலைத்திட்டத்திற்கு மேலாக எந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் செயற்பாட்டிற்கும் அங்கீகாரம் அளிக்க முடியாது. 

தனி நபர்களோ, அமைப்புகளோ அரசாங்க பாடசாலைகளுக்கு உதவி வழங்க தேவை என்றால் மாகாண கல்வி அமைச்சின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வியமைச்சின் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தின் செயலாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலயம் குறித்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அத்திட்டத்திலிருந்து நீக்கும்படி தனியார் நிறுவனமொன்றினால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேல்மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு கல்வி அபிவிருத்தி குழு உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனவரி மாதம் உலக மேமன் சங்கத்தினால் தாருஸ்ஸலாம் வித்தியாலயத்திற்கு நிதி அன்பளிப்பு செய்யப்பட்டு கட்டடமொன்று அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது. எனினும் அக்கட்டட நிர்மாண பணிகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. இதுகுறித்து நான் மாகாண சபையில் சுட்டிக்காட்டினேன். 

அத்துடன் அந்த அடிக்கல் நடும் நிகழ்வின்போது, 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தில் தாருஸ்ஸலாம் வித்தியாலயம் உள்ளடங்கியுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்தார். இவ்வறிவிப்பு வழங்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் ஒத்துழைப்புடன் நாம் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முன்வரும்போது தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. 

'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்திற்கு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டபோது மத்திய கொழும்பிலிருந்து எந்தவொரு முஸ்லிம் பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. பின்னர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யின் முயற்சியினால் இப்பாடசாலை உள்வாங்கப்பட்டது. எனவே எமக்கு கிடைத்திருக்கும் வாப்பை நலுவவிடுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -