சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட உறுப்பினரால், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தன்னை அவமானப்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டி 5 கோடி ரூபாய் நட்டஈடு கோரி, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட உறுப்பினரால், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று வெள்ளிக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டதரணி, இந்த வழக்குக்கான ஆட்சேபனையைச் சமர்ப்பிப்பதற்கு திகதியொன்றை கோரினார். இதனைக் கருத்தில் கொண்ட நீதவான், நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆட்சேபனையை சமர்ப்பிக்குமாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.