பொர­லஸ்­க­முவ பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­ விவகாரம் : கைது செய்ய நடவடிக்கை

தொடர்ச்­சி­யாக அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளா­கி­வந்த பொர­லஸ்­க­முவ பள்­ளி­வாசல் மீது நடத்­தப்பட்ட தாக்­கு­தல்­களின் பின்னால் உள்­ள­வர்­களைக் கைது செய்ய விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வா­ச­லுக்குள் இருந்து பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள தாக்­குதல் தாரி­யி­னு­டை­யது எனச் சந்­தே­கிக்­கப்படும் கைக்­க­டி­காரம் உள்­ளிட்ட சில தட­யங்­களை மையப்­ப­டுத்தி இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த சனிக்­கி­ழமை அதி­கா­லையில் பொர­லஸ்­க­முவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வா­ச­லுக்குள் புகுந்­துள்ள அடை­யாளம் தெரி­யாத சந்­தேக நபர்கள் பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.  சம்­பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் நேரடி கட்­டுப்­பாட்டில் கல்­கிசை பிராந்­திய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் பொர­லஸ்­க­முவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் தலை­மையில் ஒரு குழுவும் கல்­கிசை பிராந்­திய குற்றத் தடுப்புப் பிரிவும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளன.

இது­வரை செய்­யப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களின் படி, குறைந்த பட்சம் இரு தாக்­கு­தல்­தா­ரிகள் பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைந்­தி­ருக்க வேண்டும் எனச் சந்­தே­கிக்கும் பொலிஸார் அவர்­களைக் கைது செய்யும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

பொலி­ஸா­ருக்கு கிடைத்­துள்ள தக­வல்கள் மற்றும் கைக்­க­டி­காரம் உள்­ளிட்ட தட­யங்­களை மையப்­ப­டுத்தி மேல­திக விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. நேற்று மாலை வரை சம்­பவம் தொடர்பில் எந்­த­வொரு சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி பொர­லஸ்­க­முவ பெபி­லி­யான பகு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான ஆடை விற்பனை நிறு­வனம் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து பொர­லஸ்­க­மு­வையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பூட்டும் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்­த­துடன் அதன் ஒரு அங்­க­மாக பள்­ளி­வா­சலை பிர­தே­சத்­தி­லி­ருந்து அகற்­று­மாறு தொடர்ச்­சி­யாக முஸ்­லிம்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வந்­தது.

இது தொடர்பில் பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பா­டுகள் உள்ள நிலையில், பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­த­லா­னது பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளி­டையே அச்­சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடிவெள்ளி பத்திரிகை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -