கிழக்கு மக்களை யுத்த நிவாரணம் தொடர்பில் ஏமாற்ற இடமளியோம் - அன்வர் நௌஷாத்



சப்னி அஹமட்-

கிழக்கில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களின் போது பதிக்கப்பட்ட மக்கள், தொடர்பிலான நடவடிக்கைகள், கருத்துக்கூறல்கள், பற்றிய நம்பகத்தன்மை பெரிதும் குறைந்து செல்கின்றது. ஏனெனில் பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை அமைக்கும் போது அதில் இன ரீதியிலான சமத்துவம் பேணப்படுவதில்லை என சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் அன்வர் நௌஷாத் இன்று (11) இடம்பெற்ற சபையின் அமர்வில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கில் இன முரண்பாடுகள் தொடர்பிலாக பிரச்சனைகள் இடம்பெற்ற போதெல்லாம் நாம் முன்னின்று அவற்றை தீர்ப்பதில் பங்குகொண்டோம். இன்று யுத்த அனர்த்தம் தொடர்பிலாக சில உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டச் செயல்பாடுகள் மூலமாக இனவாதத்தை வளர்ப்பது குறித்து நாம் பெரிதும் அச்சமடைகின்றோம். நமக்கிடையே மீண்டும் ஒரு இன முரண்பாட்டை வளர்ப்பதற்கான அடிப்படையினையே இச்செயல் பாடுகள் கொண்டுள்ளன. இந்நடவடிக்கையானது திரை மறைவிலான செயல்பாடாகவும், இது குறித்த ஆட்சேபனைகள் பல நிறுவனங்கள் மூலமாக எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இது குறித்து நாம் மாவட்ட செயலாளருக்கும், கௌரவ பிரதமர், மற்றும் கௌரவ ஜனாதிபதி அவர்களின் கவனத்துக்கும் கொண்டு வரவுள்ளோம்”.

“யுத்த பாதிப்பானது கிழக்கில் மூன்று இன மக்களையும் பாதித்துள்ளது. விசேடமாக ஆட்கள் காணமல் போதல், உயிரிழப்பு, மீள் குடியேற்றம், சொத்து இழப்புக்கள், வயல் காணிகள் அபகரிப்பு, எல்லைகள் மீள் நிர்ணயம், வன இலாகா செயல்பாடுகள், அரச காணிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு நீதியான தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் வகையிலாக ஆரம்பம் முதல் இறுதி வரை நம்பகத்தன்மையுடன் பக்கச்சார்பில்லாத கருத்துக்கள் முன் மொழியப்பாடல் வேண்டும். அதை விடுத்து தனி நபர் ராஜாங்களுக்கு இடமளிக்க முடியாதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -