ஒலுவில் கடலரிப்பு விவகாரம் : ஹக்கீம் ஒலுவிலுக்கு விரைந்தார்

கரையோரம் பேனல் மற்றும் கரையோர மூல வள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர், துறைமுக அதிகார சபை அதிகாரிகள், மற்றும் பொறியியலாளர்கள் சகிதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (7) ஒலுவில் கடலரிப்பு ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை அறிந்துகொண்டு உரிய அதிகாரிகளுடன் துறைமுக சுற்றுலா விடுதியில் கலந்துரையாடினார்.

இங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில், தற்போது கடலரிப்பை தடுப்பதற்காக துறைமுக அதிகார சபையினர் கற்களை கொண்டு நிரப்புவதாகவும், கற்களை கொண்டு நிரப்பினாலும் மீண்டும் கடலரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கடலரிப்புக்கு காரணமாக உள்ள ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணிக்க நிதியுதவி வழங்கிய டென்மார்க் நிறுவனம் நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு விஞ்ஞான ரீதியாக ஆராயந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தர்.

பிரதேச மக்கள் அமைச்சரிடம் கடலரிப்புக்கு காரணமான ஒலுவில் துறைமுகத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர், இது தொடர்பாக நாளை மாலை ஜனாதிபதியை சந்தித்து கதைப்பதாகவும், அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்பிப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -