சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீபை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீபை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. எனினும் கடந்த ஓகஸ்ட் மாதம் 09ம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டிய போதிலும் இதுவரை பொலிஸ் மா அதிபரினால் அந்நியமனம் வழங்கப்படாத நிலையில் இன்று அந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார்.