காத்தான்குடி தள வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட ஷிப்லி பாறூக்

M.T. ஹைதர் அலி-

ண்மையில் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு ஒரு கோடியே எட்டு இலட்சம் ரூபாய் செலவில் அடிக்கல் நடப்பட்ட வைத்தியர்களுக்கான விடுதியினை நேற்று (08)  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேரடியாக பார்வையிட சென்றிருந்தார். 

இதன்போது குறித்த கட்டட வேலைகளை அவதானித்த அவர் இவ்வேலைகளுக்காக உபயோகிக்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் அங்கு கட்டுமான பணிகளுக்காக பாவிக்கப்படும் கொங்றீட் கலவையினுடைய தரத்தினையும், வேலையினுடைய தரம் போன்ற சகல விடயங்களையும் அவதானித்ததுடன் அங்கு காணப்பட்ட சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் காத்தான்குடி வைத்தியசாலையின் திருத்த வேலைகளுக்காகவும் இரத்த வங்கி பிரிவினை அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்ட 67 இலட்சம் ரூபாய் நிதி செலவு செய்யப்படுகின்ற இடங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டார். 

காத்தான்குடி தள வைத்தியசாலையில் இன்னும் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இக்கட்டடப் பணிகள் அனைத்தையும் துரிதமாக நிறைவு செய்ய வேண்டிய அவசியத்தையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குறித்த கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு தெளிவுபடுத்தினார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -