சாய்ந்தமருதில் ஹஜ்ஜாஜிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!

எம்.வை.அமீர், யூ.கே.காலிதீன்-

வ்வருடம் சாய்ந்தமருதில் இருந்து ஹஜ்ஜூக்கு செல்பவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 2016-08-06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையினால் நடாத்தப்பட்டது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சாய்ந்தமருது மாளிகைக்காடு கிளையின் தலைவர் அஷ்ஷேய்க் யூ.எல்.எம்.காசீம் (கியாதி) தலைமையில் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசத்தில் இருந்து ஹஜ்ஜூக்கு செல்லும் ஆண்களும் பெண்களுமாக அநேகர் கலந்துகொண்டனர்.

இங்கு இஹ்ராமும் உம்ராவும் எனும் தலைப்பில் மாவடிப்பள்ளி ஷஹ்தியா அரபுக் கல்லுரியின் அதிபர் அஷ்ஷேய்க் யூ.எல்.எம்.முபாறக் (காசிமி) விளக்கவுரையாற்றினார். ஹஜ்ஜை நிறைவேற்றும் முறை தொடர்பாக அல் ஹாமியா அரபுக்கல்லுரியின் பிரதி அதிபர் அஷ்ஷேய்க் எம்.எம்.நபார் (அஸ்ஹரி) யும் நபி (ஸல்) அவர்களின் ஸியாரத்தும் மதினாவின் சிறப்பும் பற்றிய விளக்கவுரையை, ஷார்கியா அரபுக் கல்லுரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க்எம்.எம்.எம்.சலீமும் ஆற்றினர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -