கல்வி அமைச்சர் அகில விராஜிடம், பிரதியமைச்சர் அமீர் அலி வேண்டுகோள்

நாச்சியாதீவு பர்வீன்.

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையையும்,பதவி உயர்வையும் அவசரமாக வழங்க ஆவன செய்யுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு கீழே இருக்கின்ற பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தங்களது பதவி உயர்வையும்,கடந்த கால சம்பள நிலுவையையும் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியியாக தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையையும்,பதவி உயர்வையும் இன்னும் வழங்கப்படாமல் இருப்பது, தேசிய பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களை மனதளவில் பாதிக்கின்ற விடயமாகும். எனவே மத்திய அரசுக்கு கீழே இயங்கும் தேசிய பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் விடயத்திலும் கரிசனை கொண்டு, அவர்களது உரிமையான அவர்களது பதவி உயர்வு,சம்பள நிலுவை ஆகியவற்றை விரைவில் பெற்றுக் கொடுங்கள்.

பிரதேசங்களில் கல்வி வளர்ச்சியிலும்,மாணவர்களின் இன்னோரன்ன விடயங்களிலும் தேசிய பாடசாலைகள், மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. எனவே இந்த விடயத்தில் உங்களது அதிகபட்சமான அவதானத்தை செலுத்தி மிக விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஆவன செய்யுங்கள். என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -