காலி - அம்பலன்கொட பகுதியில் வங்கிக்குச் சென்ற பெண் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனியார் வங்கியில் இருந்து பெற்றுக் கொண்ட பணத்தினை பிரிதொரு வங்கியில் வைப்பிலிடச் சென்ற வேளையே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, அந்தப் பெண் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 வயதான அந்த பெண், அம்பலன்கொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.