முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் - தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதி மொழி

முஸ்லிம், தமிழ் கூட்டமைப்பின் தலைவரான அஸாத் சாலியின் ஏற்பாட்டில் முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில், ஷூரா கவுன்சில், முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம், வை.எம்.எம்.ஏ. அமைப்பு, ஜமாஅத்தே இஸ்லாமி, ஜம்இய்யதுஷ் ஷபாப், தௌஹீத் ஜமாஅத்,மேமன் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. கடந்த காலங்களில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவாத செயற்பாடுகள் குறைந்துள்ள போதிலும் அவ்வப்போது இஸ்லாம் சமயத்தை நிந்திக்கும் வகையில் சில தரப்புக்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகின்றன.

ஆகவே, அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்ப்பதற்கு மத நிந்தனைக்கு எதிரான சட்டம் உருவாக்கப்பட வேண்டும். மேலும் முஸ்லிம்களின் கல்வி தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி அதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது.

எனவே, மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்குவதுடன் முஸ்லிம் பாடசாலைகளிலுள்ள வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக்குறை நிவர்த்திக்கப்பட வேண்டும்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்ட விவகாரத்துக்கு விரைவில் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் அவ்அமைப்புகளினால் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. எனவே முஸ்லிம் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைளை ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாகவும், தனது மேலதிக செயலாளர் இவ்விடயம் தொடர்பில் நேரடி அவதானம்செலுத்துவார் எனவும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார்.
TK
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -