தானும் உதவாது உதவி செய்துவரும் அமைச்சர் அவர்களது சேவைகளினையும் அபிவிருத்தி திட்டங்களையும் முடக்கும் வகையில் இன்று அரசியலில் அருவருக்கத்தக்க விடயங்கள் நடைபெற்று வருகின்றது. எந்தவொரு ஆதாரங்களும் இன்றி வெறும் வாய்ப்பேச்சினால் அவதூறுகளை கூறிக்கொண்டு திரியும் சில அரசியல் வாதிகளுக்கு ஊடகங்களும் பாரிய ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றது.
உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்ல உதவியாக இருந்த ஊடகங்கள் இன்று வெறும் பொய்களை மக்களிடையே பரப்பி வருகின்றது. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அவற்றை ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிந்தே சமூக வலைத்தளங்களிள் நாம் பதிவேற்றவேண்டும். தற்போதைய காலகட்டத்தில் இலங்கையினை பொறுத்தவரையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெயர் கூறாத இடங்கள் இல்லை காரணம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது சேவைதான் இனம்,மதம்,மொழி கடந்த அவருடைய சேவைதான் இன்று ஒரு தேசியத் தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்ள காரணாமாக இருக்கின்றது.
இவ்வாறு ஒரு மனிதரை மக்களின் குறைகளை தீர்க்க வக்கற்ற சில அரசியல் வாதிகள் பொய் வார்த்தைகளை கூறி அமைச்சர் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் ஆனால் மக்கள் சிந்திக்க வேண்டும் அன்று வடக்கிலிருந்து அகதியாக வெளியேற்றப்பட்ட நாம் இன்று மீண்டும் எமது சொந்த இடங்களில் குடியேற காரணமாக இருந்தது யார்?
அதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தது யார்? அனைத்தும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களே தவிர முஸ்லீம் காங்கிரஸோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்த கட்சியோ கிடையாது எந்த ஒரு அபிவிருத்தி திட்டத்தினையும் இந்த வடக்கிற்கு செய்யாத இவர்கள் இன்று அமைச்சரை குறை கூறுகின்றார்கள்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு தெரியும் அமைச்சர் அவர்களது சேவைப்பற்றி இருந்தும் பொய்யான தகவலை பரப்பும் ஊடகங்களும் வக்கற்ற அரசியல் வாதிகளும் இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள்