எம்.வை.அமீர் -
இஸ்லாமிக் ரிலீப் மற்றும் MFCD (கலாசாரத்திற்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் அமைப்பு) நிறுவனங்களின் 1-2-1 அநாதை நலத்திட்டத்தின் கீழ் பயனடையும் பிள்ளைகளின் தாய்மார்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல்“சிறுவர்களைப் பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் 09.08.2016 முதல் 10. 08. 2016 வரை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசாரத்திற்கும் அபிவிருத்திக்குமான முஸ்லிம் அமைப்பு (MFCD) இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப் படுத்தும் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து மூவின சமூகங்களையும் சேர்ந்த சுமார் ஆயிரம் பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
உளநலம், போசாக்கு, சுகவாழ்வு, சகவாழ்வு, சிறுவர் பாதுகாப்பு, சமூகசேவை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலமான வளவாளர்கள் இந்திகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரைகள் நிகழ்த்தினர்.
இந்நிகழ்விற்கு நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் எஸ். இம்தியாஸ் தலைமை தாங்கினார் அத்துடன்“சமாதானமும் சகவாழ்வும் நிலையத்தின்” பணிப்பாளர் தேசபந்து அஷ்ஷெய்க் முனீர் முலாபர், இஸ்லாமிக் ரிலீப் சார்பாக ஜனாப். ஏ.என். தன்வீர் அஹமட், கல்முனை பிரதேச செயலகத்தின் உளவளத்துறை ஆலோசகர் ஜனாப்.ஏ.ஆர். தஹ்லான், சாய்ந்தமருது சமூக வைத்திய நிலையத்தைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஜே.எம். ஹஸ்ஸான்,நிந்தவூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த அபிவிருத்தி இணைப்பு உத்தியோகத்தர் ஜனாப். ஐ.எல்.எம். ராபியூ, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சமூகசேவை உத்தியோகத்தர் ஜனாப். ஏ.எல்.எம். அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.