றிசாத்தைப் பாராட்டினார் ஹக்கீம்

ம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டக் கரும்புத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக இருப்பதாகத் தெரிவித்தார். 

அத்துடன் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கரும்புச் செய்கையாளர்கள் மாற்று வழியை மேற்கொள்ள வேண்டி நேரிடும் என்று தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், இவர்களின் பிரச்சினை தொடர்பில் நாங்கள் பல தடவைகள் அமைச்சர் ரவி கருணாநாயக்காவுடன் பேச்சு நடத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -