ஆறு கோடி பத்து இலட்சம் செலவில் காத்தான்குடி டெலிகொம் வீதி விரைவில் செப்பனிடும் பணிகள்...!

M.T. ஹைதர் அலி-
மிக நீண்டகாலமாக செப்பணிடப்படாமல் இருந்துவருகின்ற காத்தான்குடி டெடலிகொம் வீதி மக்களுடைய பாவனைக்கு உகந்ததல்லாது அவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பல சிரமங்கள்களையும், இன்னல்கயையும் அனுபவித்து வருவதோடு, அவ்வீதியால் செல்லும் கனரக வாகனங்களினால் ஏற்படுத்தப்படும் தூசு காரணமாக வீட்டினுடைய சுற்றுச்சூழல் மாசடைவதோடு, பல சுவாக நோய்களுக்கும் அவ்வீதியில் வசிப்பவர்கள் உள்ளாங்கப்பட்டு வருகின்றனர். இது ஒரு கவலை தரக்கூடிய ஒரு விடயமாக காணப்படுகின்றது.

இவ்வீதியினை புணரமைப்பு செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்திற்கு தனது உயிரை கூட துட்சமாக நினைத்து ஆட்சி பீடமேறுவதற்கு பங்காற்றியவர் என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல் அதிகாரம் பெற்றவர்களை நேரடியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கொண்ட தொடர்புகளின் பயனாக இவ்வீதி செப்பணிடப்படவுள்ளது.காத்தான்குடி டெலிகொம் வீதியானது ரூபா 61 மில்லியன் செலவில் மிக விரைவில் செப்பணிடுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வீதியினை பார்வையிடும் நோக்குடன் 2016.08.10ஆந்திகதி (புதன்கிழமை) இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட அவ்வீதி எவ்வாறு அமைக்கப்பட வேண்டுமென்ற விடயங்களை கலந்தாலோசிப்பதற்காக களவிஜயமொன்றினை மேற்கொண்டிருநதனர். 

மிக விரைவாக இவ்வீதியினுடைய பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, மிக நீண்ட காலப்பிரச்சினையாக இருந்துவந்த இவ்வீதியாது 6 மீட்டர் அகலத்தில் முற்றுமுழுதாக கொங்றீட் வீதியாக மாற்றம்பெற இருப்பதோடு, இன்னும் ஆறு மாத காலத்திற்குள் இவ்வீதி பூரணப்படுத்தப்பட்டு மக்கள் எதுவித இன்னல்களும் இல்லாமல் மிகவும் உட்சாகத்துடன் இவ்வீதியால் பயணிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கப்பெறவுள்ளது.

பல அரசியல் சூழ்ச்சிகளையும் முறியடித்து மக்களின் நலனில் மட்டும் கரிசனைகொண்டு பல தடைகளுக்கு மத்தியில் தன்னுடைய விடா முயற்சியினால் இவ்வீதியினை செப்பணிடுவதற்கு உந்து சக்தியாக இருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு இவ்வீதியால் பயணடையவுள்ள பொதுமக்கள் மற்றும் ஏனைய அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு, பொதுமக்களின் நன்மைகருதி தங்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -