நான் ’கல்லு’ வைத்தால் கட்டி முடிப்பேன் கிழக்கு முதல்வரின் அதிரடிப் பேச்சு....

நான் கட்டிடடங்களுக்குக் கல்லுவைத்தால் அதனைக் கட்டாமல் விடமாட்டேன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உரையாற்றும்போது குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 18 கோடி ரூபாய்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.. தொடர்ந்தும் அவர் தனதுரையில்.. இன்று எங்கள் ஆட்சியில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதிகளுக்கான அடிக்கல் வைப்பதென்றால் நாட்கள் போதாது.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்தியாலமமும் கல்வைக்கலாம். இது போலியான கல்லு அல்ல இவ்வருடத்துக்குள் கட்டி முடிக்கவேண்டிய கட்டிடத்துக்கான கல்லு.. எனவே அவர்களைப் போன்று கல்லு வச்சி மக்களைச் சோ காட்ட நான் வரமாட்டேன். நான் வந்து கல்லு வைத்தால் கட்டி முடிப்பேன் இல்லையென்றால் எனது பணத்தில் கட்டிக்க்கொடுப்பேன். இவர்கள் அரசியல் செய்கிறார்களா..? அல்லது அவர்களின் பெயர்களை வைத்துத் திரிகிறார்களா.. மிகக் கேவலமாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் அவர்களின் அப்பன் விட்டுப் பணத்தில் கட்டியது போன்று பெயரில் சிலை வைக்க ஆசைப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் வைத்திருக்கும் கற்களைச் சேகரித்தால் இன்று பெரும் கட்டிடம் கட்டி முடிக்கலாம். ஆனால் நான் செய்வதை மாத்திரம்தான் சொல்லுவேன். எனது அரசியல் இந்த ஆட்சியில் எவரும் செய்திராத ஒரு சிறந்த பணியில் மக்கள் எதிர்பார்த்த ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்குவேன். இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தை முடிவுறுத்த நான் கிழக்கில் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். இது முழுமையாக வெற்றிபெற்றால் கிழக்கில் வேலையில்லாதவர்களே இருக்க மாட்டார்கள். எனவே அனைவரும் என்னுடன் சேர்ந்து நமது கிழக்கைக் கட்டியெழுப்ப முன்வாருங்கள். அரசியலை நான் ஒருபோதும் தொழிலாகக் கொள்ள மாட்டேன் இது மக்களுக்கானதும், ஊர்களுக்கானதுமான சேசைக்காகவே மட்டும் பொறுப்பாகப் பயனபடுத்துகிறேன்.

ஆகவே கிழக்கைக் கட்டியெழுப்ப முழுமனதுடன் இணைந்து வாருங்கள் இன்று கிழக்கில் பெரும் சேவைகளைச் செய்யுமாறும் அதற்காக தேவையான நிதிகளை ஒதுக்கவும் களத்தில் நின்று மக்களின் பிரச்சனைகளைப் பார்க்கவும் நமது தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியுடனும் திடமாகவும் இருக்கிறார். எனவே கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கை குட்டிச் சிங்கப்பூராக்க நான் பாடுபடுவேன் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -