பாறுக் ஷிஹான்-
கட்டார் வாழ் யாழ் முஸ்லிம் சகோதரர்களின் அமைப்பின் புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) 10 மணியளவில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பிரதி அதிபர் மகேந்திரராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இக்கருத்தரங்கில் ஆசிரியர் அலீம் வளவாளராக கலந்து கொண்டு சிறந்த முறையில் மாணவர்களிற்கு கற்பித்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி முடிவில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற நான்கு மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இதன் போது பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளான உப தலைவர் நாசர் செயலாளர் சுவர்கஹான் பிரதி தலைவர் ராமிஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு பங்களிப்புகளை வழங்கினர்.