ஒலுவில் கடலரிப்பு : ஜனாதிபதியை சந்தித்தார் ஹக்கீம்

ஷபீக் ஹுஸைன்-

லுவில் கடலரிப்புக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில்  (8) மாலை சந்திது கலந்துரையாடினார்.

ஒலுவில் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலமைகளை பற்றியும், அங்குள்ள மீனவர்களும், மக்களும் படும் கஷ்டங்களை பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்ததார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுகொடுப்பது, கலரிப்புக்குள்ளாகிய பிரதேசத்தை மீள் நிரப்பி காணி உடமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இதன்போது உடனடியாக இன்று (9) செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ஹக்கீமிடம் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்து கையொப்பமிட்டு உடனடியாக நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்துக்கு சமர்பிக்க அனுப்பியுள்ளதாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார். இதில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் உயரதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உள்ளிட்ட குழுவின்ர் பங்குபற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -