அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட உள்ள டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஒபாமாவை தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளை உருவாக்கியவர் எனகடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் உள்ள போர்ட் லவ்டர்டேலில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்டிரம்ப் பேசிய போது, 'தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரைஐ.எஸ் பயங்கரவாதம் வளர்ந்திருப்பதற்கு காரணமாக இருப்பவர் ஜனாதிபதி ஒபாமா தான் என வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.
'பராக் ஹூசைன் ஒபாமா' என அவரது முழுப்பெயரையும் 3 முறை அழுத்தமாக கூறிய டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஒபாமாவை தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளைஉருவாக்கியர் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் பராக்ஒபாமாவை கௌரவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலரி கிளின்டன், ஐ.எஸ்பயங்கிரவாதிகளின் உப உருவாக்குனர் என்றும் விமர்சித்துள்ளார்.