"திருக்கோவில் பிரதேசத்தில் கௌபீ அறுவடை விழா"


ரவிச்சந்திரன்-

இன்று (06) திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராமத்தில் கிழக்கு மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் விதை உற்பத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கௌபீ செய்கையில் அறுவடை விழாவானது தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியை திருமதி தர்சினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மாகாண விவசாயத் திணைக்களத்தின் லாகுகல வலயத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ இஸ்மாலெப்பை அவர்களும் மற்றும தங்கவேலாயுதபுர விவசாயப் போதனாசிரியர் ளு.சுஜிகாந்தன் அவர்களும் மற்றும் இப்பிரதேச விவசாயிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எமது பிரதேசத்தில் கௌபீ செய்கைக்குரிய தரமான கௌபீ விதைப்பற்றாக்குறை நிலவுவதனால் இவ்வாறான திட்டங்களின் மூலம் இப்பிரச்சனையை நிவர்த்தி செய்ய முடியும் என்பதோடு குறுகிய காலத்தில் இப்பயிர்ச்செய்கையின் மூலம் அதிகஇலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்ததுடன் மேலும் இப்பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள விரும்பும் ஏனைய விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் விதைஇஏனைய உள்ளீடுகளை 50% மானிய விலையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இவ்வருடம் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களின் கீழ் 50 மூ மானிய விலையின் கீழ் முட்கம்பிச்சுருள்கள், தெளிகருவிகள், நீர் இறைக்கும்இயந்திரங்கள், நெல்அவிக்கும்உபகரணங்கள், பிளாஸ்ரிக்கூடைகள், விதைகள் (சோளம், நிலக்கடலை,பயறு, உழுந்து) மற்றும் பழமரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதன்போது தம்பிலுவில் விவசாயப் போதனாசிரியை திருமதி தர்சினி ரவிச்சந்திரன் விவசாயிகளுக்கு கௌபீ பயிர்ச்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கு தெளிவூட்டினார்.

கௌபீ செய்கையினை மேற்கொண்ட விவசாயியான சண்முகநாயகம் தனது அனுபவங்களை ஏனைய விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்வில்Pளுனுபு-வர்த்தக ரீதியிலான பப்பாசி செய்கைக்குரிய 5 ஏக்கருக்குரிய விதைகள் 50 % மானிய விலையின் கீழ் விவசாயிகளுக்கு உதவி விவசாயப் பணிப்பாளரால் வழங்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -