சவூதி அரேபியாவின் முடிவால் இலங்கையர்களுக்கு பாதிப்பு..!

வூதி அரேபியாவிற்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவது தொடர்பாக மீண்டும் மதிப்பீடு செய்யவேண்டி ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியினை தொடர்ந்து சவூதி அரேபியா பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இரண்டு பாரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் , இதன் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் 112 பேருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிர்வாக இயக்குனர் உபுல் தேசப்பிரிய எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில தற்போது வேலை இழக்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -