ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் ரியோடி ஜெனிரோவின் மரியா லென்க் அக்யூயாடிக் சென்டர் நீச்சல் குளம் திடீரென பச்சை நிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலநிறத்தில் இருந்த நீச்சல் குளம் ஒரே இரவில் பச்சை நிறமாக மாறியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, அதிகாரிகள் நீச்சல் குளத்தின் நீரில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனையில் நீரில் நிற மாற்றத்திற்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும், நீச்சல் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த காரணிகளும் நீச்சல் குளத்தில் காணப்படாததை அடுத்து, நீச்சல் போட்டிகளை இதே குளத்தில் நடத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அல்கா மற்றும் குளோரின் அளவில் ஏற்பட்ட மாற்றமே நிறமாற்றத்திற்கான காரணம் என நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.