கிழக்கு மாகாணத்தில் தரமுயர்த்தப்பட்டுள்ள வைத்தியசாலைகள் -முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்



கிழக்கு மாகாணத்தில் சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் வைத்தியசாலைகள் சில தரம்முயர்த்தப்பட்டுள்ளது. நேற்று கொழும்பு நாரேன்பிட்டி இரத்த வங்கி மாநாட்டு மண்டபத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இடம்பெற்ற மாகாண சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சகல வைத்தியசாலைகளுக்கும் அனைத்து வசதிகளும் சரியான முறையில் வழங்கவேண்டும் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத நிலமைகளை உடனடியாகத்தீர்கவேண்டும் என்ற இன்னும்பல கோரிக்கைகளுடன் சில வைத்தியசாலைகளும் தரமுயர்த்த அனுமதியும் பெற்றுக்கொண்டார்.

அந்த வகையில்:
ஆதார வைத்தியசாலைகளாகவிருக்கும் இருக்கும்
அம்பாரைப் பிராந்திய தெகியத்தக் கண்டி வைத்தியசாலை,
கல்முனைப் பிராந்திய சம்மாந்துரை வைத்தியசாலை,
மட்டக்களப்புப் பிராந்திய வாழைச்சேனை வைத்தியசாலை,
திருகோணமலைப் பிராந்திய மூதூர் வைத்தியசாலை ஆகியவை
‘ஏ’ தரத்துக்கு தரமுயர்த்தப் பட்டுள்ளதுடன்,

ஆரம்பப் பிரிவு வைத்தியசாலைகளாக இருக்கும் சம்மாந்துறை மல்வத்த ’பிஎம்சிஉ’
வான் எல பிஎம்சியு ஆகிய வைத்தியசாலைகளை பிரதேச ‘சி’ தரமாகவும்,
பிரதேச ‘சி’ தர வைத்தியசாலைகளாகவிருக்கும் பதவிசிரிபுர மற்றும் கோமரங்கடவல வைத்தியசாலைகளை மாவட்ட ‘பி’ தரமாகவும்,

’பி’ தரத்தில் இருக்கும் திருகோவில் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகவும்,
’சி’ தரத்தில் இருக்கும் மகிலடித்தீவு வைத்தியசாலையை ‘ஏ’ தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -