திருகோணமலை: மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளரிடம் மீனவர் முறைப்பாடு அடங்கிய மகஜர் கையளிப்பு

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர், பல்லவக்குளம் மீன் பிடித் தொழிலாளர்கள் மீன்பிடி திணைக்கள உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

கடந்த வருடம் மீனவத் திணைக்களத்தின் அனுமதியுடன் கடல் பரப்பிலுள்ள கரடி மலை கல்லிலிருந்து, சல்லி முனை வரை கரைவலை தொழில் புரிவதற்கு றப்பானியா பள்ளி பரிபாலன சபைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது சபை உப ஒப்பந்தத்தின் மூலம் ஜாயா நகரைச் சேர்ந்த மீன்பிடித்தொழிலாளர் அப்துல் பரீட் என்பவருக்கு அனுமதி வழங்கியது.

குறித்த நபர் அப்பிரதேச மீனவர்களை வரையறுக்கப்பட்ட பகுதியில் மீன்பிடிக்க தடை செய்த வேளை மீனவர்கள் ஒன்றினைந்து இவ்வருடத்திக்கு மேற்குறித்தவர் பொய்யான தகவல்களை திணைக்களத்திக்கு வழங்கி அனுமதி பெற்று மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றார் என குறிப்பிட்டு 123 மீனவர்கள் கையொப்பமிட்டு குறித்த நபரின் அனுமதியினை ரத்து செய்யக்கோரி மீன்பிடி உதவி பணிப்பாளரிடம் மகஜரொன்றினை கையளித்துள்ளனர்.

அதேவேளை இன்னும் ஒரு வாரத்திக்குள் தீர்க்கமான முடிவொன்றினை வழங்குவதாக உதவி பணிப்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -