தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிச்சென்ற முதியவர் சடலமாக மீட்பு.

எப்.முபாரக்-
டந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வயோதிபர் ஒருவர், திருகோணமலை, கந்தளாய் நீதிமன்றத்துக்குப் பின்புறமாகவுள்ள காணியில் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய்-பியந்த மாவத்தையில் வசித்து வந்த எச்.ஏ.தோமஸ் சிங்ஹ (வயது 87) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினமே, உயிரிழந்தவரின் மகளினால் தந்தை காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குடும்பத்தாருடன் முரண்பட்டுக்கொண்டு இனிமேல் உங்களுக்குத் தொந்தரவு தரமாட்டேன் என்று தந்தை கூறிவிட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போதே வயோதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை, நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -