எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 16 வருடங்களாக கடமையாற்றி அக்கரைப்பற்று நீர்ப்பாசன திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் முகாமைத்துவ உதவியாளர் திரு. ஆர்.சிவராம் அவர்களது சேவையினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் கல்விசாரா ஊழியர் சங்கத் தலைவர் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.எம்.ஹம்ஸா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆர்.சிவராம் அவர்களின் சேவையை பற்றி புகழாரம் செய்யப்பட்டதுடன் இவருக்கான நினைவுப் பரிசினை சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.ஜனூஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் வைபவத்தில் கல்விசாரா ஊழியர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.