நல்லூர் கொடியேற்றம் (படங்கள்)

பாறுக் ஷிஹான்-

ரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை (08) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 1ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. 

முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிசேங்களும்,ஸ்ரீமுருகப்பெருமானுக்கு உரிய மாந்திரங்கள் ஆராதனைகளும்,என்பன வசந்த மண்டவத்தில் இடம்பெற்று அங்குயிருந்து மேள தாள வாத்தியங்கள், ஒத குடை தாளவட்டம் பூடை சூழ பின் வசந்த மண்டத்தில் இருந்து சமேதராக எழுந்தருளி கொடிமரத்தினை தெய்வபாரிவாரங்கள் வந்தடைந்தன.

பின்னர் 10 மணி சுபநேரத்தில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.பின்னர் கொடிமரத்திற்கான கிரிகைகள் என்பன இடம்பெற்று அங்கு பக்தர்களின் அரோகரா கோசத்துடன் எம்பெருமான் சமேதர உள்வீதி வலம் வந்தனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட மஹோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறுவதுடன் 

இதில் 17.08.2016 அன்று மாலை 10 வது மஞ்சத் திருவிழாவும், 24.08.2016 அன்று 17 அவது திருக்கார்த்திகை திருவிழாவும்,27.08.2016 அன்று 20 ஆவது கைலாசவாகன திருவிழாவும், 27.08.2016 அன்று 21 ஆவது கஐவல்லி மஹாவல்லி திருவிழாவும்,28.08.2016அன்று 22 ஆவது திருவிழாவாக ஒருமுகத்திருவிழாவும்,31.08.2016 அன்று காலை தேர் திருவிழாவும்,01.09.2016 அன்று தீர்த்த உற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் இனிதே நிறைவடையும்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -