இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கார்...!

ந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட "டட்சுன் ரெட் - கோ" கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் குறித்த கிளை நிறுவனமானது இதுவரை 100 நாடுகளின் சந்தைகளில் குறித்த காரினை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும், அந்த நிறுவனமானது சுமார் 59 வருடங்களுக்குப் பிறகு தமது வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த மாதம் முதல் குறித்த கார் இலங்கையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த காரின் விலை இந்திய ரூபாயின் படி 260,783 தொடக்கம் 364,208 ரூபாய் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -