ஜனாதிபதிக்கும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுக்குமிடையில் விசேட சந்திப்பு..!

நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் இன்று மாலை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் ஷூரா கவுன்சில், அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி, வை.எம்.ஏ. ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகம் சம காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமை, முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினைகள் ,எதிர்வரும் ஹஜ் பண்டிகை தினத்தில் குர்பான் கொடுப்பது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி அதற்ககான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் அமையுமென அவர் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -