சபூர் ஆதம்-
முகப்பரு போட்டாலே..முந்நூறு மருந்துகள் தேடும் எம்மவர் மத்தியில்
மரணம் தம் தோள்களில் சுமந்து
நொடிகளை கணக்கிட்டு நகரும் சுஹாதாக்கள்!
காஸ்மீர் போராளிகள்;
காலால் நடந்து
வாயால் மொழிந்து
கையால் தலைவாரிக் கொண்டு
எல்லோரையும் போலவேதான் இவர்களும்....
உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும்
எப்போது தணியும்?
பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு
காஸ்மீர் போராளிகளின் ஜனனம் மட்டும்
மரணத்தில்தான் ஆரம்பம்...
காஸ்மீர் போராளிகளுக்கு காணிக்கை என்ன?
கண்ணீரா?
கப்ர்களா?
இல்லை.
எதுவுமே இல்லை....துஆக்கள் மட்டுமே!!!!