துறைமுக அதிகார சபை ஊழியர்களின் விழிப்புணர்வு பாதயாத்திரை...!

எம்.எஸ்.எம்.சாஹிர்-
லங்கை துறைமுக அதிகாரசபையின் 37ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறுநீரக நோயாளர்களுக்கு துறைமுக அதிகார சபையினால் நிதி சேகரித்து பங்களிப்பு செய்யும் முகமாக விழிப்புணர்வு சம்பந்தமான பாதயாத்திரை துறை முக அதிகாரசபை ஊழியர்களினால் நேற்று (02.08.2016) மேற்கொள்ளபட்டது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கிணங்க, துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்பிக ரணதுங்கவின் தலைமையில், நேற்று (02.08.2016) காலை 8 மணி முதல் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பித்து துறைமுக அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு முன்னால் 11 மணியளவில் பாதயாத்திரை நிறைவு பெற்றது.

இதில் துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்பிக ரணதுங்க, உட்பட உயர் முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், பகுதி தலைவர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் துறைமுக ஊழியர்கள் என சுமார் 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -