இன்று பாராளுமன்றத்தில் குழப்பம்..!

பாராளுமன்றத்தில் சபாநாயகரின் கட்டளையை மதிக்காமல் கூட்டு எதிர்கட்சியினர் குழப்பம் விளைவித்ததால் பாராளுமன்றம் சற்றுமுன்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வற்வரி தொடர்பாக இன்றைய பாராளுமன்ற ஒன்றுகூடல் இடம் பெற்றது.

காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் கால அவகாசம் கேட்டு கூச்சலிட்டனர். இதன்போதுவிமல் மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர் தொடர்ந்தும் கூச்சலிட்டு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதே வேளை பந்துல குணவர்தன தமது இருக்கையை விட்டு பாராளுமன்றத்திற்கு நடுவில் வந்தார். இதனால் சபாநாயகர் “பாராளுமன்றத்தை நடத்த ஒத்துழைக்க வேண்டும், ஏற்கனவே இவ்வாறான தவறு நிகழ்ந்தது இனியும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது, பந்துல குணவர்தன அவரது இடத்திற்கு செல்ல வேண்டும்” என பல முறை எச்சரிக்கையினையும் விடுத்தார்.

கூட்டு எதிர்கட்சியினர் இதனை ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிட்டதால் பாராளுமன்றம் சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -