"பயங்கரவாத சக்திகளோ,விடுதலைப்புலிகளோ மீண்டும் தலைதுாக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது"



அஷ்ரப் ஏ சமத்-

பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினா் இந்த நாட்டில் மிகவும் பிரச்சித்தி பெற்ற லங்காதீப, டெயிலி மிரா் பத்திரிகைகளின் விஜயா வெளியீடுகளின் தலைவருமான பியகம, மல்வானை பிரதேசத்தினை பிரநிதித்துவப்படுத்தும் ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பிணரும் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சருமான ருவான் விஜயவர்த்தனவை தேசிய ஜக்கிய அமைப்பினால் கௌரவப்படுத்தப்பட்டது. 

இந் நிகழ்வு இவ் அமைப்பின் தலைவா் என்.எம். அமீன் தலைமையில் வெள்ளவத்தை எக்சலன்சி ஹோட்டலில் நேற்று (5) நடைபெற்றது. இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, ஜனாதிபதி சட்டத்தரணி, தற்போதைய இராஜாங்க அமைச்சின் செயலாளா் எம்.என் சுகையிா், ஜம்மியத்துல் உலமா தலைவா் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி ஆகியோா்களினால் இந்த நாட்டில் முஸ்லீம்களது சில பிரச்சினைகள் இரஜாங்க அமைச்சருக்கு எத்திவைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சா் உரையாற்றுகையில்;

இந்த நாட்டில் பயங்கரவாத சக்திகலோ அல்லது விடுதலைப்புலிகளோ மீண்டும் தலைதுாக்குவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால் இந்த நாட்டில் வாழ்ந்த சகல சமுககங்களும் உயிா் உடைமைகள் இழந்து துண்பப்பட்டா்கள். 

அவா் காத்தாண்குடி, அருந்தலாவ. வெள்ளவத்தை சென் ஆண் சோ்ச், போன்ற மத ஸ்தானங்களின் விடுதலைப்புலிகள் தாககுதல்களை நினைவுபடுத்தி பேசினாா், அத்துடன் அளுத்கம போன்றதொரு இன்னொரு நிகழ்வு இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழமாட்டாது. அதற்காக பாதுகாப்பு பிரிவு மிக அவதாணமாக நடந்து கொள்ளும். இந்த நாட்டில் மத ரீதியாக வோ வேறு சக்திகள் இந்த நாட்டிக்குள் வந்து பயிற்சியோ அல்லது இங்கு நிலைகொள்ள எமது பாதுகாப்பு படைகள் உசாா் நிலையில்உள்ளது.

இதற்காக மதத் தலைவா்கள் கண்னும் கருத்துமாகவும் பாதுகாப்புப்பிரிவோடு தொடா்பாகவும் இருத்தல் வேண்டும். இந்த நாட்டுக்குள் எதிா்காலத்தில் உள்ள இளம் சந்ததியினா் மீள விடுதலைப்புலிகள் உயிா் பெற இடமளிக்காது. இநத நாட்டில் புதிய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரி பிரதமா் ரணில் தலைமையிலான ஆட்சி மலா்ந்துள்ளது. 

இவா்களது புதிய ஆட்சியில் சகல சமுகங்களும் இந்த நாட்டில் பிறந்தவா்கள் சகல உரிமைகளை அனுபவிக்க உரிமை உண்டு. அதன் படியே சட்டம் ஓழுங்கு சகலருக்கு சமம். அத்துடன் நாம் தற்காலிகமாக சமதானாத்தைப் பெற்றாலும் இன்னும் வட கிழக்கில் நல்லிணக்கம் ஏற்படவில்லை.

அதனை ஏற்படுத்தி முழுமையாக நம் நாட்டில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்தி சகல சமுகங்களும் ஒரே கொடியின் கீழ் இலங்கையா் என்ற உணா்வுடன் வாழ்வதற்கு நாம் வழிவகுக்க வேண்டும். அத்துடன் எமது பாதுகாப்பு படையினா் நல்லிணக்க விடயங்களில் விட்டுக்கொடுத்து சட்டம் ஓழுங்கு பொலிசாா் இணைந்து செயல்படுத்த உள்ளது என இராஜாங்க அமைச்சா் ருவான் விஜயவா்த்தன அங்கு உரையாற்றினாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -