
சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என உள்ளூராட்ச்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அமைச்சர்களை பொதுமக்கள் சந்திக்கும் தினமாகிய இன்று புதன்கிழமை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினருக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்க்கும் இடையில் இடம்பெற்ற சுயாதீனமான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்ப்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவிக்கையில்
அமைச்சர்களான ஹக்கீம், றிஷாத்திடம், இவ் உறுதி மொழியினை ஏற்க்கனவே வழங்கி இருக்கிறேன். உங்களது ஊரின் சகல ஆவணங்களையும் எம்மிடம் தந்துள்ளார்கள். நீங்களும் அவ்வூர் சார்பாக வந்துள்ளீர்கள் இதனை நிறைவேற்றுவேன். அதேபோன்று உங்களது ஊருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வர உள்ளேன்.
மூன்று நிமிட நேர குறுகிய இச்சந்திப்பின்போது பள்ளிவாசல் சார்பாக அதன் செயலாளர் அப்துல் மஜீத் உலமா சபை தலைவர் காசிம் மௌலவி சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவர் உஷாம் சலீம் உட்பட 20 இற்கும் மேற்பட்டோர் பலரும் கலந்துகொண்டனர்.