கல்முனையில் நீர் சேகரிப்பு மற்றும் நீர் உந்தும் நிலையம் திறந்து வைப்பு...!

ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன்-
ல்முனையில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு மற்றும் நீர் உந்தும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) இடம்பெற்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்குப் பிராந்திய பொது முகாமையாளர் பொறியாளாலர் எம்.ஏ.ரஷீத் தலைமையில்இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சருமானரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். இதில் மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், அப்துல் ரஸ்ஸாக் ஜவாத், முன்னாள் கல்முனை மாநகரபிரதி முதல்வரும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.ஏ. மஜீத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்மூலம் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, துறைநீலாவணை, கல்லாறு,சோனைக்குடியிருப்பு, மணற்சேனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களிலுள்ள சுமார் 76,276 குடும்பங்கள் சீராக குடிநீரை பெறுவதன் மூலம் நன்மையடையவுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -