ஆயுதங்களை விட ஊடகங்கள் சக்தி வாய்ந்த புரட்சிளை மேற்கொள்ளவல்லன - மௌலவி ஏ.எல்.எம்.அஷ்ரஃப்

எம்.ஏ.றமீஸ்-
ல்லரசு நாடுகள் தன்னகத்தே வைத்திருக்கின்ற அதி நவீன பலம் பொருந்திய ஆயுதங்களை விட ஊடகங்கள் சக்தி வாய்ந்த புரட்சிளை மேற்கொள்ளவல்லன என அக்கரைப்பற்று ஜம்இயத்துல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.அஷ்ரஃப் தெரிவித்தார். 

சிலோன் முஸ்லிம் இணைத்தள செய்திச் சேவையின் நான்காண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இன்று(03) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சேவையின் பிரதானி பஹத் ஏ மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வல் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் இல்லாம் மனிதர்கள் இல்லை என்றளவிற்கு ஊடகங்களின் பங்களிப்பு மக்களை இரண்டறக் கலந்திருப்பதை காணக்கூடியதாய் உள்ளது. மக்களோடு தொடர்பு பட்ட ஊடகங்கள் மக்களை நெறிப்படுத்துவதற்கும் மக்களை நேரிய பாதையில் இட்டுச் செல்லும் அறிவு ரீதியான பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும்.

இலங்கை நாட்டினைப் பொறுத்த வரையில் முஸ்லிம்களுக்கான தனியான ஊடக அமைப்புக்கள் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. மேலைத்தேய நாடுகளில் உள்ள சில ஊடகங்கள் முஸ்லிம்களை வேண்டுமென்றே தீவிர வாதக் குழுக்கள் என்று பொய்யான செய்திகளைச் சித்தரிப்பதைக் காண்கின்றோம். இவ்வாறாக பக்கச்சார்பாக ஒரு இனத்தையோ அல்லது ஒரு சமூகத்தினையோ வேண்டுனெம்று குறைகூறுமளவிற்கு ஊடகங்கள் செய்ற்படக்கூடாது.

இவ்வாறாக சில ஊடகங்களி குறிப்பிடுவதைப்போல் பொய்யான தோற்றப்பாட்டினையுடையவர்கள் அல்ல இஸ்லாமியர்கள். அமைதியினையும் சமாதானத்தினையும் பேணக் கூடியவர்களே இஸ்லாமியர்கள். உலகரங்கில் சாந்தி சமாதானம் மிளிர வேண்டும் என்பதற்காக பல்வேறான காத்திரம் மிக்க பங்களிப்புக்களை முஸ்லிம்கள் செய்து வருவதை நாம் காணலாம். ஐக்கிய நாடுகள் சபை உலகிலுள்ள மிக முக்கிய மார்க்கங்களில் இஸ்லாம் மார்க்த்தினைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் போப் ஆண்டவர் இஸ்லாமியர்கள் சிறந்தவர்கள் என்றும் சன்மார்க்கம் மிக்கது இஸ்லாம் மார்க்கம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

எப்போதும் இஸ்லாமியர்கள் ஆட்சியினைப் பிடிக்க அலைந்து திரிபவர்கள் அல்ல. நாட்டில் ஏற்படுத்தப்படும் ஆட்சியாளர்களுடன் சுமூக உறவினனைப் பேணி ஒற்றுமைப்பட்டுச் செயற்படக்கூடியவர்கள். சுய தேவைகளுக்காக பல்வேறான கருத்துக்களை சமூகத்தில் பரவக்கூடியவர்கள் அல்ல முஸ்லிம்கள். இந்த நாட்டில் மட்டுமல்லாது கடல் கடந்த நாடுகளிலும் வெகுவாகப் பேசப்படும் தலைநகரில் காணப்படும் தேசிய நூதனசாலை, பேராதனைத் தாவரவியற் பூங்கா போன்றவற்றை நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில் அன்பளிப்புச் செய்தவர்கள் முஸ்லிம்களே. இவ்வாறான பல்வேறான கைங்கரியங்களை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் முஸ்லிம்கள் செய்திருக்கின்றார்கள் என்றார்.

இந்நிகழ்வில் மௌலவி ஏ.எல்.ஐயூப், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.அனீஸ், சட்டத்தரணி எம்.பஹீஜ், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீன், அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாளர் அதிபர் எம்.தாவூத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -