காரைதீவு நிருபர் சகா-
சம்மாந்துறை வலயத்திலுள்ள ஒரேயொரு சுப்பர் தேசிய பாடசாலையான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எ.சி.எ.மொகமட் இஸ்மாயில் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். வைபவத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களாக டாக்டர் உமர்மெனலானா அகமட்கியாஸ் உள்ளிட்ட அதிதிகளும் பாடசாலைச்சமுகமும் கலந்துகொண்டனர்.புதிய அதிபராக இஸ்மாயில் சம்பவத்திரட்டுப்புத்தகத்திலும் தினவரவுப்புத்தகத்திலும் பதிவுசெய்து பதவிப்பிரமாணம் செய்வதையும் பின்னர் இடம்பெற்ற சிறுகூட்டத்தில் பணிப்பாளரும் அதிபரும் உரையாற்றுவதையும் காணலாம்.